• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1988 ஆம் ஆண்டின் 72 ஆம் இலக்க மத்தியஸ்த சபைகள் சட்டத்தை திருத்துதல்
- மத்தியஸ்த சபை ஆணைக்குழு உறுப்பினர்களை நியமித்தல், மத்தியஸ்த சபை அதிகார பிரதேசங்களை நிர்ணயித்தல் மற்றும் தீர்க்கமுடியாத பிரச்சினைகள் உட்பட அத்தகைய பிணக்குகள் சம்பந்தமாக நீதிமன்றங்களின் வழக்கு தொடுத்தல் போன்ற பணிகளுக்குரிய ஏற்பாடுகள் சமகால தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் அறிமுகப்படுத்தும் பொருட்டு 1988 ஆம் ஆண்டின் 72 ஆம் இலக்க மத்தியஸ்த சபைகள் சட்டத்தை திருத்துவதற்கு 2022‑09‑22 ஆம் திகதியன்று அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.