• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மருத்துவ தொழில்சார்பாளர்களின் கல்லூரிக்கு காணித் துண்டொன்றை வழங்குதல்
- இலங்கை மருத்துவ தொழில்சார்பாளர்களின் கல்வி மேம்பாட்டிற்காக 1974 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் இலங்கை மருத்துவ தொழில்சார்பாளர்களின் கல்லூரியானது தாபிக்கப்பட்டுள்ளது. குறித்த கல்லூரிக்கு புதிய அலுவலக கட்டிடத் தொகுதியொன்றை தாபித்து நடாத்திச் செல்லும் பொருட்டு காணித் துண்டொன்றை ஒதுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, திம்பிரிகஸ்யாய பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான 21.30 பேர்ச்சர்ஸ் விஸ்தீரணமுடைய காணித்துண்டொன்றை இலங்கை மருத்துவ தொழில்சார்பாளர்களின் கல்லூரிக்கு இறையிலி கொடைப் பத்திரமொன்றின் மூலம் வழங்கும் பொருட்டு சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.