• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-11-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்ளூர் துணை நிறுவனங்களினால் மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் போது மேற்கொள்ளப்படவேண்டிய கொடுப்பனவுகளுக்கு நிதியளிப்பதற்காக வௌிநாடுகளிலிருந்து குறுகியகால வௌிநாட்டு நாணய கடன்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளை வௌியிடுதல்
- உள்ளூர் துணை நிறுவனங்களினால் உள்நாட்டு சந்தையில் பொருட்களை உற்பத்தி செய்வதற்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும்போது இலங்கைக்கு வௌியே கூட்டிணைக்கப்பட்ட அதன் தாய் நிறுவனம் அல்லது ஒரே கூட்டு கம்பனிகளினால் அனுப்பப்படும் அந்நிய செலாவணியைப் பயன்படுத்தி கொடுப்பனவுகளைச் செய்வதற்கான வசதிகளை செய்யும் பொருட்டு 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் 7(1) ஆம் பிவின் கீழ் ஒழுங்குவிதிகளை ஆக்கும் பொருட்டுநிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.