• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-11-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி பிரதிலாபங்கள் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் நலன்புரி பிரதிலாப கொடுப்பனவுகளை வழங்குவதற்கான ஒழுங்குவிதிகளை விதித்தல்
- 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி பிரதிலாபங்கள் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் நலன்புரி பிரதிலாப கொடுப்பனவுகள் (கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு பொருத்தமானவர்களை தெரிவு செய்தல்) கட்டளை 2022 ஒக்றோபர் மாதம் 20 ஆம் திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.