• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-11-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடை உதவியின் மூலம் நிதியளிக்கப்படவுள்ள இலங்கையின் சமூக சகவாழ்வு மற்றும் சமாதானத்தைப் பலப்படுத்தும் கருத்திட்டம் மற்றும் பசுமைக் கொள்கை கலந்துரையாடலை இலகுபடுத்தும் கருத்திட்டம்
- 'பசுமைக் கொள்கை மீதான இலங்கை' மற்றும் 'அனைவரையும் உள்ளடக்கிய அமைதியான சமூகத்தை' உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு நல்கும் நோக்கில் 2021 இலிருந்து 2027 வரையிலான காலப்பகுதியின் சார்பில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பல்வருட சுட்டெண் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிதி வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, உரிய துறை மற்றும் ஒத்துழைப்பு பணிகள் சார்பில் 2021-2024 காலப்பகுதிக்கு 60 மில்லியன் யூரோ கொண்ட சுட்டெண் கொடை நிதியொன்று ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் இலங்கையில் 'சமூக சகவாழ்வு மற்றும் சமாதானத்தைப் பலப்படுத்தும் கருத்திட்டம்' மற்றும் 'பசுமைக் கொள்கை கலந்துரையாடலை இலகுபடுத்தும் கருத்திட்டம்' என்பவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு 16 மில்லியன் யூரோக்கள் கொண்ட கொடையொன்றை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, குறித்த கொடைகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் கொடை உடன்படிக்கைகளை செய்து கொள்ளும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.