• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1865 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பொலிஸ் கட்டளைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்
- நடைமுறையிலுள்ள 1865 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பொலிஸ் கட்டளைச் சட்டமானது இதற்கு முன்னர் 37 தடவைகள் திருத்தப்பட்டுள்ளதோடு, இந்த கட்டளைச்சட்டத்தை மீண்டு திருத்துவதற்கு 2014 நவெம்பர் மாதம் 19 ஆம் திகதியன்று அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், தற்போதைய சமூக போக்கின் அடிப்படையில் இதற்காக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 1865 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பொலிஸ் கட்டளைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.