• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1973 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க தேசிய சுவடிகள் காப்பக சட்டத்தை திருத்துதல்
- 2012 திசெம்பர் மாதம் 05 ஆம் திகதியன்று அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டவாறு 1973 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க தேசிய சுவடிகள் காப்பக சட்டத்தை திருத்தும் பொருட்டு சட்டமூல மொன்றைத் தயாரிப்பதற்கு சட்டவரைநருக்கு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சட்டவரைநரினால் சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதோடு, இதற்காக தற்போதைய அமைச்சரவையின் கொள்கை அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட ​வேண்டுமென சட்டவரைநரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. கடதாசி ஆவணங்களுக்கு மேலதிகமாக கட்புல செவிப்புல ஆவணங்கள், திரைப்பட ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் போன்றவை பாரிய அளவில் பாதுகாக்கப்படுவதற்காக முன்வைக்கப்படுகின்றமையினால், சர்வதேச தரங்களுக்கும் தேசிய ரீதியிலான தேவைகளுக்கும் ஏற்ற விதத்தில் தேசிய சுவடிகள் காப்பக சட்டத்தை மேலும் திருத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க ஆவண முகாமைத்துவம், ஆவண பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் ஆவணங்களின் முகாமைத்துவம் தொடர்பிலான நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை நியமித்து பொருத்தமான திருத்தங்களை இனங்காண்பதற்கும் அதற்கிணங்க, ஏற்பாடுகளை உள்ளடக்கி ஏற்கனவே சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை மேலும் திருத்தும் பொருட்டு தேவையான நடவடிக்கையினை எடுப்பதற்குமாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.