• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேர்தல் செலவினத்தை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யும் சட்டம்
- அமைச்சரவையின் அங்கீகாரத்தின் மீது தேர்தல் செலவினத்தை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யும் பொருட்டு சட்டவரைநரினால் சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க' வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.