• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுற்றாடல் அடையாளப்படுத்தல் தொடர்பான தேசிய கட்டமைப்பு
- நீண்டகால சுற்றாடல், சமூக மற்றும் பொருளாதார நலனுக்காக உற்பத்தியாளர்கள் நிலைபேறான அடிப்படையில் அவர்களுடைய உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நுகர்வோர் பொறுப்புடனும் கவனமாகவும் உற்பத்திகளையும் சேவைகளையும் நுகர வேண்டியுள்ளது. இதன் பொருட்டு 12 ஆவது 'நிலைபேறுடைய அபிவிருத்தி நோக்கத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவாறு நிலைபேறுடைய நுகர்வு மற்றும் உற்பத்தி போக்கினை உறுதிப்படுத்துதல்' என்பதனை அடைவதற்காக தர நிர்ணயம் மற்றும் சான்றுப்படுத்தல் போன்ற விஞ்ஞான ரீதியிலான முறைகளை அறிமுகப்படுத்தவேண்டியுள்ளது. இதற்கிணங்க, உற்பத்திகளின் சூழல் செயலாற்றுகைகளை நுகர்வோர் அடங்கலாக ஏனைய வழங்கல் சங்கிலியிலுள்ள தரப்பினர்களின்பாலும் உறுதிப்படுத்துவதற்கும் நுகர்வோர் அல்லது கொள்வனவு செய்வோர் நம்பிக்கையுடன் உரிய உற்பத்திகளை கொள்வனவு செய்வதை தீர்மானிப்பதற்கும் இயலுமாகும் வகையிலும் சுற்றாடல் அடையாளப்படுத்தல் தொடர்பான தேசிய கட்டமைப்பினை நடைமுறைப்படுத்து வதற்காக சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.