• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையின் சுற்றுச்சூழல் உணர் திறன்மிக்க பகுதிகள் தொடர்பிலான தேசிய கொள்கை
- தற்போது நிகழும் சில முறையற்ற காணி பயன்பாடு மற்றும் கமத்தொழில் முறைகள், முறையற்ற திண்மக் கழிவு அகற்றல் மற்றும் நிலையற்ற விதத்தில் இயற்கை வளங்களின் பாவனை போன்ற பல்வேறுபட்ட மனித செயற்பாடுகள் காரணமாக சூழல் மாசடைதல், மண்ணரிப்பு, நீர்மூலங்கள் வற்றிப்போதல் மற்றும் மனித - வனவிலங்கு மோதல்கள் போன்ற பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. இதன் காரணமாக உயிரினப் பல்வகைமை மற்றும் சுற்றாடல் முறைமை என்பன சவாலுக்கு உட்பட்டுள்ளன. இந்த நிலைமை நீண்டகாலமாக சுற்றாடல் மாசடைதலுக்கும் நச்சுத்தன்மைக்கு ஆளாவதற்கும் காரணமாய் அமையும். ஆதலால் அனைவருக்குமான சமூக பொருளாதார நன்நடத்தை மற்றும் வாழக்கூடிய சூழல் என்பன பொருட்டிலான சுற்றாடல் ரீதியில் உணர் திறன்மிக்க பகுதிகளைத் தாபிப்பதன் மூலம் ஆரோக்கியமான, பாதுகாப்பான சூழல் மற்றும் பொருளாதாரத்தினை உறுதிப்படுத்துதல் என்பன சுற்றுச்சூழல் உணர் திறன்மிக்க பகுதிகள் தொடர்பிலான தேசிய கொள்கையை அறிமுகப்படுத்துவதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது இதற்கிணங்க நாடுபூராவுமுள்ள உணர் திறன்மிக்க பகுதிகளைக் இனங்கண்டு, குறித்த பகுதிகளில் காணி பயன்பாடு திட்டமிடல் மற்றும் முகாமைத்துவத்திற்கு பொதுமக்களினதும், தனியார் துறையினதும் அரசாங்க துறையினதும் நிபுணத்துவர்களினதும் பங்களிப்பினைப் பெற்றுக் கொண்டு, முகாமைத்துவ போக்கினை சகல மட்டங்களிலும் உறுதிப்படுத்தி, சுற்றுச்சூழல் உணர் திறன்மிக்க பகுதிகளை பாதுகாப்பதற்கும் நிலைபேறான பயன்பாட்டிற்கும் தேவையான வழிகாட்டுதல்களின் பொருட்டு இலங்கையின் சுற்றுச்சூழல் உணர் திறன்மிக்க பகுதிகள் தொடர்பிலான தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்து வதற்காக சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.