• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2022 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்த) சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்படும் குழுவை நியமித்தல்
- 2002 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க வலுசக்தி வழங்கல் பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 02 ஆம் பிரிவிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் நியமிக்கப்பட்ட 'வலுசக்தி வழங்கல் குழுவின்' சிபாரிசின் மீது விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் மீது எந்தவொரு நபருக்கோ அல்லது கம்பனியொன்றுக்கோ பெற்றோலியப் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, விற்பனை, விநியோகம் மற்றும் பகிர்ந்தளிப்பு என்பன பொருட்டிலான அனுமதிப்பத்திரங்களை வழங்க முடியுமென்னும் ஏற்பாடுகள் 2002 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க வலுசக்தி வழங்கல் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 5(1) ஆம் பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆயினும், 2002 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் இரண்டு (02) வருட காலத்திற்கு விதிக்கப்பட்டதன் காரணமாக இந்த சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் நியமிக்கப்பட்ட வலுசக்தி வழங்கல் குழுவானது இல்லாதொழிந்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க பெற்றோலிய பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்த) சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் 'வலுசக்தி வழங்கல் குழுவுக்கு' பதிலாக 'அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்படும் குழுவை' நியமிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிணங்க, இந்தக் குழுவை நியமிக்கும் பொருட்டு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.