• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்கள் மற்றும் அபாயகர ஔடதங்களின் பாவனையை தடுப்பதற்கு சனாதிபதி விசேட செயலணியொன்றைத் தாபித்தல்
- நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்கள் மற்றும் அபாயகர ஔடதங்களின் பரவலை மற்றும் பாவனையை தடுப்பதற்கு பொருத்தமான நடைமுறை செயற்பாடுகளை இனங்காணுதல், திட்டமிடுதல் மற்றும் செயற்படுத்துதல் என்பன சார்பில் சனாதிபதி செயலணியொன்றைத் தாபிக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினாலும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினாலும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.