• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
75 ஆவது சுதந்திர தினத்தன்று மாத்திரம் ஏற்புடையவாறு கட்டணங்கள் அறவிடப்படாது தேசிய பூங்காக்கள், உல்லாச பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்களை பார்வையிடுவதற்கும் திரைப்படங்களை பார்ப்பதற்கும் பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்குதல்
- 75 ஆவது சுதந்திர தினமான 2023 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி தேசிய பூங்காக்கள், உல்லாச பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்களை இலவசமாக பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கும் அன்றையதினம் நாடு பூராவுமுள்ள திரையரங்குகளில் நுழைவுக் கட்டணத்தை 50 சதவீதத்தால் குறைத்து திரைப்படங்களை பார்ப்பதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்குமாக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.