• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-10-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட நியதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட நியதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

(i) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபார பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் 5 ஆம் பிரிவுகளின் கீழ் வௌியிடப்பட்ட நியதிகள் உள்ளடக்கப்பட்ட 05 வர்த்தமானி அறிவித்தல்கள்.

(ii) 1962 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க அரசிறை பாதுகாப்பு சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் வௌியிடப்பட்ட நியதிகள் உள்ளடக்கப்பட்ட 02 வர்த்தமானி அறிவித்தல்கள்.

(iii) 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் 14 ஆம் பிரிவின் கீழ் வௌியிடப்பட்ட நியதிகள் உள்ளடக்கப்பட்ட 02 வர்த்தமானி அறிவித்தல்கள்.

(iv) 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி வரிச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் வௌியிடப்பட்ட நியதிகள் உள்ளடக்கப்பட்ட 02 வர்த்தமானி அறிவித்தல்கள்.

(v) 2005 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க பெறுமதி சேர்க்கப்பட்ட வரிச் சட்டத்தின் 2அ ஆம் பிரிவின் கீழ் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.