• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-10-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Sri Lankan Airlines Ltd. கம்பனி மற்றும் அதன் துணைக் கம்பனிகளை மறுசீரமைத்தல்
- வௌிப்படைத்தன்மைவாய்ந்த பெறுகை நடவடிக்கையின் மூலம் தெரிவுசெய்யப்படும் முதலீட்டாளர்களுக்கு Sri Lankan Airlines Ltd. கம்பனியின் கணிசமான பங்குகளையும் நிறுவனத்தின் முகாமைத்துவத்தையும் கையளிப்பதன் மூலம் Sri Lankan Airlines Ltd. கம்பனி மற்றும் அதன் துணைக் கம்பனிகளை மறுசீரமைப்பது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, Sri Lankan Airlines Ltd. கம்பனியை மறுசீரமைக்கப்படவேண்டிய வழிமுறை பற்றிய விடயங்களை ஆராய்ந்து அமைச்சரவைக்கு சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பணியினை நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள அரசாங்க தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு பிரிவுக்கு கையளிப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.