• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மத்தியஸ்தம் பற்றிய சிங்கப்பூர் சமவாய சட்டமூலம்
- மத்தியஸ்தம் மூலம் ஏற்படும் சர்வதேச இணக்கப்பாட்டு உடன்படிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் சமவாயம் அல்லது 'மத்தியஸ்தம் பற்றிய சிங்கப்பூர் சமவாயம்' ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத் தொடரில் 2018‑12‑20 ஆம் திகதியன்று உறுப்பு நாடுகளினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை 2019‑08‑07 ஆம் திகதியன்று இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதோடு, அதனை இலங்கையில் அமுல்படுத்துவதற்கு உள்ளூர் சட்டங்களைத் தயாரிக்கவேண்டியுள்ளது. இதற்கிணங்க, உரிய சமவாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு பொருத்தமான சட்டமூலமொன்றை தயாரிக்கும் பொருட்டு நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.