• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1972 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க கப்பல் முகவர்களுக்கு அனுமதிபத்திரம் வழங்கும் சட்டத்தை திருத்துதல்
- 1972 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க கப்பல் முகவர்களுக்கு அனுமதிபத்திரம் வழங்கும் சட்டத்தின் 3 ஆம் 10 ஆம் பிரிவுகளிலுள்ள ஏற்பாடுகளின் மீது 2005 ஆம் ஆண்டில் கொள்கலன் தொழிற்பாட்டாளர்களுக்கான ஒழுங்குவிதிகள் வௌியிடப்பட்டுள்ளன. நீதிமன்றத்தினால் இந்த சட்டத்தின் 10 ஆம் ஒழுங்குவிதியானது திருத்தப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, உரிய ஏற்பாடுகளை உள்ளடக்கி 1972 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க கப்பல் முகவர்களுக்கு அனுமதிபத்திரம் வழங்கும் சட்டத்திற்குத் தேவையான திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கு 2022‑07‑04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின் மூலம் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.