• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-10-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆயுள்வேத சட்டத்தை திருத்துதல்
- 1961 ஆம் ஆணடின் 31 ஆம் இலக்க ஆயுள்வேத சட்டம் இதற்கு முன்னர் காலத்திற்கு காலம் பல சந்தர்ப்பங்களில் திருத்தப்பட்டுள்ளதோடு, நிலைபேறுடைய அபிவிருத்தி குறியிலக்குகளை அடைவதற்கு இயலுமாகும் வகையிலும் சமகால தேவைகளுக்கு ஏற்ற வகையிலும் இந்த சட்டத்தை மேலும் திருத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, உள்நாட்டு மருத்துவ துறையின் மேம்பாட்டிற்காக ஆயுள்வேத திணைக்களத்தின் சேவைகளை விரிவுபடுத்து வதற்கும் ஆராய்ச்சி ஔடத பூங்காக்களை உருவாக்குவதற்கும் பொருத்தமான ஏற்பாடுகளை உள்ளடக்கி ஆயுள்வேத சட்டத்தை திருத்தும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.