• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காலி - தெனியாய - மாதம்பே வீதியின் சூரியகந்த - ரக்வான வரையிலான (A017) வீதிப் பகுதியை புனரமைக்கும் கருத்திட்டம்
- காலி - தெனியாய - மாதம்பே வீதியின் சூரியகந்த - ரக்வான வரையிலான (A017) வீதிப் பகுதியை புனரமைப்பதற்கு சருவதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியத்துடன் கடன் உடன்படிக்கையொன்று செய்து கொள்ளப்பட்டுள்ளது. இந்த வீதிப் பகுதியின் புனரமைப்பு பகுதிகளை மூன்று (03) ஒப்பந்த பொதிகளின் கீழ் மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றுள் இரண்டு ஒப்பந்த பொதிகள் அமைச்சின் பெறுகை குழுவின் அதிகார எல்லைக்குள் வருவதோடு மீதி ஒப்பந்த பொதியானது அமைச்சரவையின் அதிகார எல்லைக்குள் வருகின்றது. இதற்கிணங்க, அமைச்சரவையின் அதிகார எல்லையின் கீழ்வரும் ஒப்பந்த பொதியை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் K.D.A. Weerasinghe & Company (Pvt.) Ltd. கம்பனிக்கு வழங்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.