• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Sri Lankan Airlines சேவை சார்பில் விமானசேவை பதவியணியினரின் சேவை நடவடிக்கைகளை திட்டமிடுதல் மற்றும் வளங்களை முகாமைத்துவம் செய்தல் என்பன பொருட்டு தானியங்கு முறைமையொன்றை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
- உலகம் முழுவதும் வர்த்தக விமானசேவைகள் அதன் விமானசேவைகள் பதவியணியினரின் நடவடிக்கைகளை திட்டமிடுதல் மற்றும் வளங்களை முகாமைத்துவம் செய்தல் என்பன பொருட்டு தானியங்கு முறைமையொன்று செயற்படுத்துகின்றது. Sri Lankan Airlines சேவையின் தற்போது நடைமுறையிலுள்ள முறைமையின் ஒப்பந்த காலமானது 2022‑10‑31 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. ஆதலால், பொருத்தமான சேவை வழங்கும் நிறுவனமொன்றை தெரிவு செய்வதற்கு சருவதேச போட்டிகரமான கேள்விமுறையானது பின்பற்றப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு உரிய பெறுகையை ஐந்து (05) வருட காலத்திற்கு M/s CAE Flight Services USA, INC கம்பனிக்கு வழங்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.