• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு 80 தொன் திறனுடைய Bollard Pull Twin Azimuth Stern Drive Harbour வகை இழுவை (Tug) படகொன்றை கொள்வனவு செய்தல்
- கொழும்பு துறைமுகத்தில் தற்போது சிறந்த நிலையில் இயங்கும் ஏழு இழுவைப்படகுகள் உள்ளதோடு, எதிர்கால செயற்பாடுகளுக்காக 80 தொன் திறனுடைய மேலும் இலுவைப் படகொன்றை கொள்வனவு செய்யவேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சருவதேச போட்டி கேள்வி செயற்பாட்டினைப் பின்பற்றி இழுவைப் படகொன்றை கொள்வனவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.