• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பழைய சட்டவைப்பு சட்டத்திற்குப் பதிலாக சட்டவைப்புக்கான புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்
- இலங்கையில் எழுத்துமூல வரலாறும் கலாச்சார ரீதியிலான அடையாளத்தையும் எடுத்துக் காட்டும் பொது அதிகாரசபைகளில் சாட்சியான ஆவணங்கள் மற்றும் தனிப்பட்ட ஆவணங்களை முறையாக முகாமித்தல் மற்றும் பாதுகாத்தல் என்பன தேசிய சுவடிகாப்பு திணைக்களத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அச்சு வௌியீடுகளின் சட்டவைப்புகளுக்குரியதாக 1839 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க பத்திரிகை கட்டளைச் சட்டம், 1885 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க அச்சாளர்கள் மற்றும் வௌியீட்டாளர்களின் கட்டளைச் சட்டம் மற்றும் 1902 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க அச்சக கட்டளைச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்கள் இந்த திணைக்களத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதற்கிணங்க, உரிய ஆவணங்களின் சட்டரீதியிலான பிரதிகளை தேசிய சுவடிகாப்புத் திணைக்களத்தின் கட்டுக்காப்பில் வைக்கப்பட்டுள்ளன. 131 உலக நாடுகளுக்கிடையே பழமையான சட்டவைப்பு சட்டம் இலங்கையில் உள்ளதோடு, சமகால தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் இந்த சட்டத்தை திருத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 2018 ஆம் ஆண்டிலிருந்து உரிய விடயம் சம்பந்தமாக நிபுணர்களின் குழுவொன்றினால் தொடர்புபட்ட தரப்பினர்களின் கருத்துக்களை பெற்று தயாரிக்கப்பட்டுள்ள ஆரம்ப வரைவினை அடிப்படையாகக் கொண்டு சட்டவைப்புக்கான புதிய சட்டமொன்றை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.