• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- திறந்த கணக்கு முறையின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வதற்குரியதாக 2022 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க கொடுப்பனவு முறைகள் தொடர்பிலான இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளும் வௌிநாடுகளில் சேவை புரியும் இலங்கையர்களினால் இந்நாட்டிற்கு பணம் அனுப்புவதை ஊக்குவிக்கும் நோக்கில் 2022 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க கொடுப்பனவு முறைகள் தொடர்பிலான இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளும் வௌியிடப்பட்டுள்ளன. இதற்கிணங்க பால்மா, சிவப்பு பருப்பு அடங்கலாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் கோழி உணவு உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருட்டுகள் திறந்த கணக்கு / பொருட்கள் விற்றதன் பின்னர் பணம் செலுத்தும் அடிப்படை என்னும் கொடுப்பனவு செய்யும் முறைகளின் கீழ் இறக்குமதி செய்தலை அமுல்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க கொடுப்பனவு முறைகள் தொடர்பிலான இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதியானது 2022‑09‑16 ஆம் திகதியிடப்பட்டதும் 2297/79 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று வௌிநாடுகளில் சேவை புரியும் இலங்கையர்களை ஊக்குவிக்கும் வழிமுறையொன்றாக அவர்களுக்கு முற்றுமுழுதும் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கும் வகையில் விதிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதியானது 2022‑09‑23 ஆம் திகதியிடப்பட்டதும் 2298/55 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க மேற்குறிப்பிட்ட இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.