• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வாடி வீடு அபிவிருத்தி கருத்திட்டமொன்றை செயற்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணித் துண்டை நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்குதல்
- நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான யாழ்ப்பாணம், காரைதீவு வீதி, 09 ஆம் இலக்க மனையிடத்தில் அமைந்துள்ள காணியை வாடி வீடு அபிவிருத்தி கருத்திட்ட மொன்றை செயற்படுத்துவதற்காக 30 வருட குத்தகை அடிப்படையில் M/s The Grand Mountain Hotel (Pvt) Ltd., கம்பனிக்கு வழங்குவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க உரிய நிபந்தனைகளின் மீது குறித்த காணியை M/s The Grand Mountain Hotel (Pvt) Ltd., கம்பனிக்கு வாடி வீடு அபிவிருத்தி கருத்திட்ட மொன்றை செயற்படுத்துவதற்காக 30 வருட காலத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்கும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.