• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காணாமல் போனவர்களின் குடும்பங்களை வலுவூட்டும் பொருட்டு ஒரேதடவையில் வழங்கப்படும் கொடுப்பனவை வழங்குதல்
- காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு பதிவாளர் அதிபதியினால் வழங்கப்படும் காணவில்லை என்னும் சான்றிதழினை அடிப்படையாகக் கொண்டு காணமல்போனவரின் கிட்டிய உறவினருக்கு 100,000/- ரூபாவினை செலுத்துவதற்கு 2022‑03‑14 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஆயினும் காணிவில்லை என்னும் சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்கு நீண்டகாலம் செல்கின்றமை, செலுத்தப்படும் 100,000/- ரூபா போதுமானதாக இல்லாமை போன்ற விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு உரிய நபர் காணாமல் போயுள்ளமை பற்றி இழப்பீட்டு அலுவலகத்தினால் உறுதிப்படுத்திக் கொண்டிருப்பின் காணவில்லை என்னும் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளும் தேவையினை நீக்குவதற்கும் செலவுத்தப்படும் தொகையை 200,000/- ரூபா வரை அதிகரிப்பதற்குமாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.