• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்ட பிராந்திய கைத்தொழில் பேட்டைகளிலிருந்து கைத்தொழில்களைத் தாபிப்பதற்காக காணித் துண்டுகளை குறித்தொதுக்குதல்
- 1990 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கைத்தொழில் மேம்பாட்டு சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக தாபிக்கப்பட்ட பிராந்திய கைத்தொழில் சேவை குழுக்கள் மற்றும் கைத்தொழில் அமைச்சின் கீழான கருத்திட்ட மதிப்பீட்டுக் குழு என்பவற்றினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு பிராந்திய கைத்தொழில் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இனங்காணப்பட்ட 16 முதலீட்டாளர்களுக்கு 35 வருட நீண்டகால குத்தகை அடிப்படையில் 16 காணித் துண்டுகளை குறித்தொதுக்கும் பொருட்டு கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.