• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-10-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2023 நிதி ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- 2023 நிதி ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை வரையும் பொருட்டு 2022‑08‑22 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க ஒவ்வொரு செலவு தலைப்பின் கீழுமான வரைவு வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலமானது அமைச்சரவையினால் பரிசீலனை செய்யப்பட்டது. 2023 ஆம் ஆண்டிற்கான மொத்த மீண்டுவரும் செலவினம் 4,634 பில்லியன் ரூபாவாகவும் மொத்த மூலதனச் செலவு 3,245 பில்லியன் ரூபாவாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 2023 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியின் பிரசுரித்து அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.