• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-10-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2022/2023 பெரும் போகத்திற்குத் தேவையான Murate of Potash (MOP) பசளை கொள்வனவு செய்வதற்கான பெறுகை
- ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படும் 50 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட நிதியினைப் பயன்படுத்தி 2022/2023 பெரும் போகத்திற்குத் தேவையான 40,000 மெற்றிக்தொன் Murate of Potash பசளை கொள்வனவு செய்வதற்கு 2022‑06‑20 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கிணங்க உரிய கொள்வனவு செயற்பாடு பின்பற்றப்பட்டுள்ளதோடு, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு உரிய ஒப்பந்தத்ததை Ameropa Asia Pte. Ltd. கம்பனிக்கு வழங்கும் பொருட்டு நீர்ப்பாசன அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.