• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-10-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'உணவு கொள்கைக் குழுவைத்' தாபித்தல்
- உணவு பாதுகாப்பு மற்றும் போசாக்கினை உறுதிசெய்வதற்கான தீர்மானங்களை எடுக்கும் போது கீழ் மட்டத்திலிருந்து உயர் மட்டம் வரை திறமுறையினை பின்பற்றி கிராமிய பொருளாதார புத்துயிரளிப்பு நிலையத்தை பலப்படுத்தும் நோக்கில் பல்துறை பொறிமுறையொன்றை அரசாங்கம் அண்மையில் தாபித்துள்ளது. அத்தியாவசிய உணவு உற்பத்தி மற்றும் விநியோக பொறிமுறையின்பால் வழிகாட்டுதல், மேற்பார்வை செய்தல் அதேபோன்று பல்வேறுபட்ட நிர்வாக மட்டங்களில் சமூகத்தில் மிகுந்த கவனத்திற்கு உள்ளாகவேண்டியவர்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை பெற்றுக் கொள்ளும் சாத்தியம் இந்த பொறிமுறையின் ஊடாக உறுதிசெய்யப்படும். இந்த பொறிமுறையினை முறையாகவும் வினைத்திறனுடனும் நடைமுறைப்படுத்தும் பொருட்டு விநியோகம், விலை நிர்ணயம் மற்றும் விற்பனை தொடர்பிலான குறுகியகால பிரச்சினைகள் மற்றும் அதேபோன்று நாட்டில் விநியோக செயற்பாடுகள் சம்பந்தமாக உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் ஆகியோர்களுக்கிடையில் நம்பிக்கையை கட்டியெழுப்புதல் மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துதல் என்பன பொருட்டு சனாதிபதியின் செயலாளரின் தலைமையில் உரிய நிறுவனங்களின் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் 'உணவு கொள்கைக் குழுவைத்' தாபிப்பதற்காக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் உடன்பாடு தெரிவிக்கப்பட்டது.