• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-09-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அமைச்சர்களின் வௌிநாட்டு பயணங்களை வரையறுத்தல்
- தற்போது இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடியான பொருளாதார நிலைமையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, அரசாங்க செலவுகளைக் குறைக்கும் நோக்கில் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களை அத்தியாவசியப் பணிகளுக்காக மாத்திரம் வரையறுப்பதற்கும், அவ்வாறான சுற்றுப்பயணங்களுக்குத் தேவையான உத்தியோகத்தர் ஒருவர் அல்லது குறித்த சுற்றுப்பயணக் பணிகளுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஒருசிலர் அடங்கிய குழுவொன்றை மாத்திரம் பங்குபெறச் செய்விப்பதற்குமாக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் உடன்பாடு தெரிவிக்கப்பட்டது.