• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-09-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தை திருத்துதல்
- 1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தை திருத்துவதற்கு இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு, அதற்கிணங்க சட்டவரைநரினால் திருத்தச் சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது. தற்போது அதிகரித்துவரும் பயணிகள் போக்குவரத்துக்கான முச்சக்கர வண்டிகள், பாடசாலை வேன் வண்டிகள் / பேருந்துகள், அலுவலகப் போக்குவரத்து சேவைகள் போன்ற பயணிகள் போக்குவரத்துச் சேவைகளுக்கான கொள்கைகள், ஒழுங்குறுத்துகை ஒழுங்குவிதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளையும் 1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தில் உட்சேர்க்கப்பட்டு குறித்த சட்டத்தை மேலும் திருத்துவது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சட்டவரைநரினால் தற்போது தயாரிக்கப்பட்டுவரும் சட்டமூலத்தில் குறித்த ஏற்பாடுகளை உள்ளடக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.