• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-09-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சர்வதேச சிவில் விமானசேவைகள் சமவாயத்தின் (சிகாகோ சமவாயம்) 50(அ) ஆம் பிரிவு மற்றும் 56 ஆம் பிரிவு என்பவற்றைத் திருத்துவதற்கு உரிய நெறிமுறைகளை ஏற்றுக் கொள்தல்
- சர்வதேச சிவில் விமானசேவைகள் சமவாயத்தின் (சிகாகோ சமவாயம்) 50(அ) ஆம் பிரிவு மற்றும் 56 ஆம் பிரிவு என்பவற்றைத் திருத்துவதற்கு உரிய நெறிமுறைகளை திருத்துவதற்கு சருவதேச சிவில் விமான சேவைகள் அமைப்பின் 39 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை உடன்பாடு தெரிவித்துள்ளது. 50(அ) பிரிவினைத் திருத்துவதன் மூலம் பேரவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 36 இலிருந்து 40 ஆக அதிகரிப்பதற்கும், 56 ஆவது பிரிவைத் திருத்துவதன் மூலம் Air Navigation Commission இன் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 19 இலிருந்து 21 ஆக அதிகரிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படும். தற்போது 60 உறுப்பு நாடுகள் குறித்த இரண்டு நெறிமுறைகளையும் அங்கீகரித்துள்ளதோடு, 128 ஆவது  Instrument of Ratification அங்கீகரிக்கப்படும் நாள் தொடக்கம் இந்த நெறிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும். அதற்கிணங்க உறுப்பு நாடொன்றாக குறித்த இரண்டு நெறிமுறைகளையும் இலங்கை ஏற்றுக்கொள்வதற்காக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.