• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-09-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டம்
- மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் கொடையாக 30 மில்லியன் யூரோக்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, அதற்கான ஒப்பந்தத்தில் 2016‑03‑16 ஆம் திகதியன்று கையொப்பமிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க இந்தக்ருத்திட்டத்தின் காலஎல்லை 2024‑06‑15 ஆம் திகதியுடன் நிறைவுபெறவுள்ளது. ஆனாலும், கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய COVID - 19 தொற்றுநிலைமை மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் காலஎல்லை மற்றும் நன்கொடை ஒப்பந்தத்தின் செல்லுபடியாகும் காலஎல்லை என்பவற்றை 2025‑06‑15 ஆம் திகதி வரை நீடிக்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமி சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.