• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-09-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கும் கனடாவின் கல்கரி பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- இரு தரப்புகளுக்கும் இடையில் தெரிவு செய்யப்பட்ட கல்விச் செயற்பாடுகள், கற்பித்தல் மற்றும் ஆய்வு நடவடிக்கைகளை ஒழுங்குறுத்துவதற்கு கல்வியலாளர்களைப் பரிமாற்றிக் கொள்ளல், பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டப்பின்படிப்பு மாணவர்களை பரிமாற்றிக் கொள்ளல், ஒன்றிணைந்த ஆய்வுச் செயற்பாடுகளை நடாத்துதல் மற்றும் வதிவிடப் பயிற்சி வாய்ப்புகளை வழங்குதல் போன்ற கல்வித் துறைகளில் ஒத்துழைப்பினை ஏற்படுத்திக் கொள்வதற்காக ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கும் கனடாவின் கல்கரி பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.