• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட பின்வரும் ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* அரச துறையின் இறக்குமதிகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட துறைகளில் நடவடிக்கை ஒத்துழைப்புக்களை உறுதிப்படுத்துவதற்காக ஒருசில தொழிற்றுறைகளுக்குத் தேவையான மூலப்பொருட்கள், உபகரணங்கள் மற்றும் பயன்பாட்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இயலுமாகும் வகையில் 2022‑08‑23 ஆம் திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகள்.

* நிலவுகின்ற மட்டுப்படுத்தப்பட்ட வெளிநாட்டு அந்நியச் செலாவணிப் பணத்திரவத்தன்மையை முகாமைத்துவம் செய்வதற்காக இலங்கை மத்திய வங்கி பரிந்துரைகளின் பிரகாரம் தெரிவு செய்யப்பட்டுள்ள பொருட்கள் பலவற்றை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு 2022‑08‑23 ஆம் திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகள்.