• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையின் காலநிலை மாற்றம் தொடர்பிலான மூன்றாவது தேசிய தொடர்பாடல் அறிக்கையை ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் பற்றிய கட்டமைப்பு சமவாயத்திற்கு முன்வைத்தல்
- ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் பற்றிய கட்டமைப்பு சமவாயத்தின் ஒரு தரப்பு நாடொன்றாக இலங்கை சமகால காலநிலை மாற்றங்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. அதற்கிணங்க, 2000 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் முறையே முதலாவது மற்றும் இரண்டாவது தொடர்பாடல் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கையில் காலநிலை, பொருளாதார மற்றும் சமூகச் சூழல், தேசிய பசுமை இல்ல வாயு பதிவேடு, பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை குறைக்கும் நடவடிக்கைகள், காலநிலை மாற்றங்களின் ஆபத்து மற்றும் அதற்கு இசைவாக்கமடையும் நடவடிக்கைகள், கல்வி, பயிற்சி மற்றும் ஆற்றல் அபிவிருத்தி தொழிநுட்ப பரிமாற்றங்கள், ஆராய்ச்சி மற்றும் முறைசார்ந்த கண்காணிப்புக்கள் போன்ற தகவல்கள் உள்ளடக்கப்படல் வேண்டும். இதற்கிணங்க, காலநிலை மாற்றங்கள் பற்றிய நிபுணர் குழு மற்றும் நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்புக் குழுக்களின் கருத்துக்களையும் பிரேரிப்புகளையும் பெற்றுக் கொண்டு சுற்றாடல் அமைச்சினால் இலங்கையில் காலநிலை மாற்றங்கள் தொடர்பான மூன்றாவது தேசிய தொடர்பாடல்கள் அறிக்கை – 2018-2021 தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையினை ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றங்கள் தொடர்பான கட்டமைப்பு சமவாயத்திற்குச் சமர்ப்பிப்பதற்காக சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.