• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வளர்ச்சி தொடர்பான அமைச்சரவை உபகுழுவைத் தாபித்தல்
- தற்கால நெருக்கடியான பொருளாதார நிலைமையின் மத்தியில் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக உயர் முன்னுரிமை வழங்கி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக துரிதமான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டியுள்ளது. அதற்கிணங்க, தேசிய பொருளாதார முகாமைத்துவப் பணிகளுக்குத் தேவையான திறமுறை ரீதியான வழிகாட்டல்களை வழங்கும் பொருட்டு பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வளர்ச்சி தொடர்பான அமைச்சரவை உபகுழுவை தாபிப்பது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இந்த குழுவானது, மாண்புமிகு சனாதிபதி அவர்களின் தலைமையில் மாண்புமிகு பிரதம அமைச்சர் அடங்கலாக ஐந்து (05) அமைச்சரவை அமைச்சர்களைக் கொண்டு நியமிப்பதற்காக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.