• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-09-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுதல் என்பவற்றுக்கான சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு அங்கீகாரம் கோரல்
- ஆண் பெண் சமூக ஏற்றத்தாழ்வினை குறைப்பதன் மூலம் பெண்களை வலுவூட்டுவதற்கான பல நிகழ்ச்சித்திட்டங்கள் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, இந்த நிகழ்ச்சித்திட்டங்களை "லிய சரணி" என பெண்களுக்கான தேசிய ஒன்றிணைந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பெண்களுக்கான கொள்கைகளைத் தயாரித்தல் மற்றும் ஒழுங்குறுத்தலுக்கான தேசிய மகளிர் குழு மற்றும் பெண்களை வலுவூட்டுதல், அபிவிருத்தி தொடர்பிலான இலங்கை பெண்கள் பணியகம் ஆகிய இரண்டு நிறுவனங்களும் சட்டபூர்வமாக தேசிய மட்டத்தில் இயங்காமை பெண்களை வலுவூட்டுவது சம்பந்தமாக நிலவும் பொறிமுறையில் பிரதான குறைபாடாக இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இலங்கை பெண்களின் பாலின சமத்துவம் அதேபோன்று உரிமை பாதுகாப்பு என்பவற்றினை உறுதிப்படுத்தும் நோக்கில் உரிய ஏற்பாடுகளை உள்ளடக்கி பெண்கள் சமத்து'வம் மற்றும் வலுவூட்டும் சட்டமூலமொன்றை தயாரிக்கும் பொருட்டு அடிப்படையாகக் கொள்வதற்காக ஆரம்ப வரைபொன்றைத் தயாரிக்குமாறு பெண்' பாராளுமன்ற குழுவிடம் கோரிக்கை விடுப்பதற்காக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.