• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-09-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை சட்டத்தை திருத்துதல்
- நீதிமன்றத்தினால் குற்றவாளியாக்கப்பட்ட ஆள் ஒருவரின் மேன்முறையீட்டினை பரிசீலனை செய்யும் போது குறித்த நபர் கைது செய்யப்படிருந்த காலம் அல்லது அதில் ஒரு பகுதி அவருடைய தண்டனை கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ள காலப்பகுதியின் ஒரு பகுதியாக கணக்கில் எடுப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கி 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவையின் உரிய ஏற்பாடுகளைத் திருத்துவது பொருத்தமானதென நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் கீழான விசேட பிரிவின் குற்றவியல் உபகுழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை சட்டத்தின் 323(5) ஆம் பிரிவைத் திருத்துவதற்கான சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.