• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-09-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய போசாக்கு கொள்கை - 2021-2030
- பிரசைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை நுகர்வதற்கு வாய்ப்பினை வழங்கும் பாதுகாப்பான உணவு சூழலொன்று இருப்பது அடங்கலாக மக்களின் போசாக்கு நிலைமையை சிறந்த முறையில் பேணுவதன்பால் தாக்கத்தினைச் செலுத்தும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு வெற்றிகரமான தீர்வுகளை வழங்கும் நோக்கில் "தேசிய போசாக்கு கொள்கை - 2021-2030” தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கையர் சகலருக்கும் சிறந்த போசாக்கு என்னும் குறிக்கோள் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான திறமுறை கட்டமைப்புடன் கூடிய இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.