• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-09-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாரிய அளவிலான அபிவிருத்தி கருத்திட்டங்களின் 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு முடிவிலுள்ளவாறான முன்னேற்றம்
‑ வரிசை அமைச்சுக்களினால் நடைமுறைப்படுத்தப்படும் பாரிய அளவிலான அபிவிருத்தி கருத்திட்டங்களின் 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு முடிவிலுள்ளவாறான திரண்ட பௌதிக முன்னேற்றம் மற்றும் குறித்த கருத்திட்டங்கள் சம்பந்தமாக நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கருத்திட்ட மற்றும் முகாமைத்துவ மேற்பார்வை திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு அமைவாக 5.8 ரில்லியன் முதலீட்டுடன் கூடிய 1,000 மில்லியன் ரூபாவை விஞ்சிய 260 பாரிய அளவிலான அபிவிருத்தி கருத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் 125 கருத்திட்டங்களுக்கு வௌிநாட்டு நிதியிடல் வழிமுறையின் ஊடாக நிதி வழங்கப்படுவதோடு, இந்தக் கருத்திட்டங்களைப் பூர்த்தி செய்யும் வருடங்கள் 2030 வரை பரந்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் 2 ஆவது காலாண்டில் நாட்டில் நிலவிய அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக எழுந்த இறக்குமதி வரையறைகள், மூலப் பொருள் பற்றாக்குறை, எரிபொருள் பிரச்சினை, மின்சார துண்டிப்பு, விலையேற்றம் அதேபோன்று இவற்றுடன் தொடர்புபட்ட ஒப்பந்த முகாமைத்துவ பிரச்சினைகள் காரணமாக இந்த அபிவிருத்தி கருத்திட்டங்களின் தொடர்ச்சியான செயற்பாட்டிற்கு கடும் பாதிப்பேற்பட்டுள்ளது. நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த தகவல்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு மேற்போந்த கருத்திட்டங்களின் சீரான செயற்பாட்டினை உறுதி செய்யும் பொருட்டு உரிய தரப்பினர்களின் ஒத்தாசையினைப் பெற்றுக் கொள்வதற்கும் நிலவும் பிரச்சினைகளை துரிதமாக தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுத்து இந்த கருத்திட்டங்களின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகளை அடைவதற்கு பிரதம அமைச்சரின் செயலாளரின் தலைமையில் சிரேட்ட உத்தியோகத்தர்களைக் கொண்ட உத்தியோகத்தர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.