• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-09-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கற்கை உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு தொடர்பிலான உடன்படிக்கை
- கற்கை உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு தொடர்பில் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கும் சீனாவின் ரியன்ஜின் பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலை தொடர்பிலான பாடசாலைக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்கு முன்மொழியப் பட்டுள்ளது. வௌிநாட்டு வளங்கள் திணைக்களம், வௌிநாட்டலுவல்கள் அமைச்சு, தேசிய வரவுசெலவுத்திட்ட திணைக்களம் என்பவற்றினால் முன்வைக்கப்பட்ட அவதானிப்புரைகளையும் சேர்த்து வரையப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு சட்டமா அதிபரின் உடன்பாடும் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.