• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றை கைச்சாத்திடுதல்
- சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கையின் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சுக்கும் ஓமான் சுல்தான் இராச்சியத்தின் மரபுரிமை மற்றும் சுற்றுலா அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டிலான வரைவு உடன்படிக்கைக்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.