• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2022/2023 பெரும் போகத்திற்கு யூரியா கொள்வனவு செய்தல்
- 2022 யூன் மாதம் 07 ஆம் திகதியன்று அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டவாறு 2022/2023 பெரும் போகத்திற்கு யூரியா பசளை கொள்வனவு செய்யும் பொருட்டு உரிய பெறுகை செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பெறுகையின் கீழ் 150,000 மெற்றிக்தொன் யூரியா பசளை கொள்வனவு செய்வதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள கேள்விதாரரினால் சுமார் 12,500 மெற்றிக்தொன் யூரியா பசளையை வழங்குவதற்கு மாத்திரம் விலைமனுக் கோரல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, குறித்த யூரியா பசளையை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கும், மேலும் 125,000 மெற்றிக்தொன் யூரியா பசளையை துரிதமாகக் கொள்வனவு செய்வதற்கு இலத்திரனியல் (e-procurement) கொள்வனவு வழிமுறையினைப் பின்பற்றி மீண்டும் விலைமனு கோருவதற்குமாக கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.