• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் திருகோணமலை அணுப்பீட்டு நிலையம் அமைந்துள்ள காணியில் சூரியசக்தி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
- குச்சவௌி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிற்றலை ஒலிபரப்பு நிலையம் நடாத்திச் செல்கின்ற காணியில் சூரியசக்தி மின்னுற்பத்திக் கருத்திட்டமொன்றை மேற்கொள்வதற்காக 2022‑01‑18 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, பொருத்தமான முதலீட்டாளர் ஒருவரை தெரிவு செய்வதற்காக கருத்திட்ட பிரேரிப்புகள் கோரப்பட்டுள்ளதுடன், 07 பிரேரிப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளன. குறித்த பிரேரிப்புகளை மதிப்பீடும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள தொழிநுட்ப மதிப்பீட்டு குழுவினால் குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான முதலீட்டாளராக 3W Power Management Ltd நிறுவனம் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கிணங்க, குறித்த முதலீட்டாளர்களுடன் இணைந்து பிரேரிக்கப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வெகுசன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.