• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரிய பயிலுநர்களுக்கு சலுகை வட்டி அடிப்படையில் மாணவர் கடன் திட்டமொன்றைத் தாபித்தல்
- தேசிய கல்வியியல் கல்லூரியினால் க.பொ.த (உயர்தர) பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு இரண்டு (02) வருட கால நிறுவன பயிற்சியையும் ஒரு (01) வருட சேவைக்கால பயிற்சியுமாக ஆசிரியர் பயிற்சி வழங்கப்படுகின்றது. ஒரு வருட சேவைக்கால பயிற்சி காலத்தில் வதிவிட வசதிகள் தேசிய கல்வியியல் கல்லூரிகளினால் வழங்கப்படுவதில்லை தங்குமிடம் மற்றும் பயணச் செலவுகள் போன்றவற்றை பயிலுநர்களே ஏற்க வேண்டும். தற்போது ஆசிரிய பயிலுநர் ஒருவருக்கு தேசிய கல்வியியல் கல்லூரிகளில் நிறுவனம்சார் பயிற்சி காலப்பகுதியில் செலுத்தப்படும் 5,000/- ரூபாவைக் கொண்ட மாதாந்த கொடுப்பனவானது போதுமானதாக இல்லை. அதனால், ஆசிரிய பயிலுநர்களுக்கு தற்போது செலுத்தப்படும் கொடுப்பனவுக்கு மேலதிகமாக மாதமொன்றுக்கு உயர்ந்தபட்சம் மேலும் 10,000/- ரூபாவைக் கொண்ட நிதி வசதியினை சலுகை வட்டி அடிப்படையில் அரசாங்க வங்கியொன்றினூடாகப் பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.