• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2018 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க விமான போக்குவரத்துச் சட்டத்தை திருத்துதல்
- சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான மொன்றியல் சமவாயத்தின் கீழ் சர்வதேச சிவில் விமான சேவைகள் பொறுப்பு வரையறைகள் 2021‑01‑22 ஆம் திகதியன்று வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளதுடன், அதன் உயர் பொறுப்பு வரையறைகள் இலங்கை விமான சேவை தொழிலின் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளமை தெரியவந்துள்ளது. ஆதலால் உள்ளூர் விமான சேவை தொழில் துறையை குறித்த பொறுப்பு வரையறைகளிலிருந்து விடுவிப்பதற்கு இயலுமாகும் வகையில் 2018 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க விமான போக்குவரத்துச் சட்டத்தின் உரிய பொறுப்பு வரையறைகளை மீளாய்வு செய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினால் 2018 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க விமான போக்குவரத்து சட்டத்தின் 2ஆம் 5ஆம் 8 ஆம் பிரிவுகளுக்கு திருத்தங்களை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதென சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கிணங்க இந்த சட்டத்தின் குறித்த பிரிவுகளை திருத்தும் பொருட்டு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.