• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கமத்தொழில் துறை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றை கைச்சாத்திடுதல்
- கமத்தொழில் துறை ஒத்துழைப்பு சம்பந்தமாக ஓமான் சுல்தான் இராச்சியத்தின் கமத்தொழில், கடற்றொழில் வளங்கள் மற்றும் நீர்வளங்கள் அமைச்சுக்கும் இந்நாட்டின் கமத்தொழில் அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றினை கைச்சாத்திடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்காக முன்மொழியப்பட்டுள்ள உத்தேச வரைவு உடன்படிக்கைக்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கிணங்க உரிய புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடும் பொருட்டு கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.