• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்த வரவுசெலவுத்திட்டத்தை தயாரித்தல்
- நீண்டகாலமாக அரசாங்க வருமானம் குறைவடைந்து அரசாங்க செலவினங்கள் அதிகரித்துள்ளமையால் ஏற்பட்டுள்ள அரசாங்க நிதிச் சமநிலையற்றதன்மை தற்போது தீவிரமான பொருளாதார நெருக்கடியாக மாறியுள்ளது. இதனோடு தொடர்புடைய பொருளாதார சவால்களின் மத்தியில் 2023-2025 நடுத்தவணைக்கால வரவுசெலவுத்திட்ட கட்டமைப்பிற்குள் 2023 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தைத் தயாரிக்கும் போது செயல்நுட்பத்துடனும் மூலோபாய ரீதியிலான அணுகுமுறையுடனும் மேற்கொள்ள வேண்டியுள்ளதுடன், நிலவுகின்ற நெருக்கடியான பொருளாதார சூழல் மேலும் மோசமடையாமல் தடுத்தல் மற்றும் எதிர்கால நிலைபேற்றுத் தன்மைக்கு அடித்தளமிடும் வகையில் தயாரிக்கப்பட வேண்டியுள்ளது. இதற்கிணங்க 2023-2025 நடுத்தவணைக்கால வரவுசெலவுத்திட்ட கட்டமைப்பிற்குள் அடைவதற்கு எதிர்பார்க்கப்படும் அரசாங்க நிதி இலக்குகளின் அடிப்படையில் தற்போது மொத்த தேசிய உற்பத்தியின் 9 சதவீதமாகவுள்ள அரசாங்க வருமானத்தை 11.3 சதவீதமாக அதிகரித்தல், 18.9 சதவீதமாகவுள்ள அரசாங்க செலவினங்களை 18.1 சதவீதமாகக் குறைத்தல், ஆரம்ப வரவுசெலவுத்திட்ட மீதியை மறை 4 சதவீதத்திலிருந்து மறை 1 சதவீதத்திற்கு குறைத்தல் மற்றும் வரவுசெலவுத்திட்ட வித்தியாசத்தை மறை 9.9 சதவீதத்திலிருந்து மறை 6.8 சதவீதமாகக் குறைத்தல் போன்ற இலக்குகளை 2023 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் பூர்த்தி செய்து கொள்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோன்று, 2023 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டை பூச்சிய (Zero – Based Budgeting) அடிப்படையில் தயாரிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 2023 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தை தயாரிப்பதற்குரியதாக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதிப அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.