• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க நிறுவனங்களுக்கான தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு கொள்கை
- அரசாங்க நிறுவனங்கள் டிஜிட்டல் முறைமையில் செயற்படுகின்ற போக்கு அதிகமாகக் காணப்பட்டாலும், தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பில் போதியளவு கவனம் செலுத்தாமை, காலங்கடந்த தொழிநுட்பப் பயன்பாடு மற்றும் அரசாங்க துறையில் சைபர் பாதுகாப்பு முகாமைத்துவத்திற்குத் தேவையான தேர்ச்சிமிக்க பணியாளர்களின் பற்றாக்குறை போன்றவற்றால் இந்த நிறுவனங்களின் தகவல் மற்றும் தகவல் தொழிநுட்ப முறைமை பாரிய ஆபத்தினை எதிர்கொண்டுள்ளது. இந்த நிலைமைகளைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை கணனி அவசர ஆயத்தநிலை குழுவினால் இலங்கையில் 2019 - 2023 தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு மூலோபாயத்திற்கு அமைவாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச தகவல் பாதுகாப்பு தரநிர்ணயங்களுக்கு அமைவாகவும் அரசாங்க நிறுவனங்களுக்கான தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு கொள்கையானது தயாரிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் 'பகிரங்க அதிகாரசபைகள்' என வரைவிலக்கனப்படுத்தப்பட்டுள்ள சகல அரசாங்க நிறுவனங்களும் இந்த கொள்கையை நடைமுறைப்படுத்துவது கட்டாயமானதாகும். இதற்கிணங்க, அரசாங்க நிறுவனங்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள தகவல் மற்றும் சைபர் பாதுகாப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் பொருட்டு தொழிநுட்ப அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.